மயிலாப்பூர் கபாலீஸ்வர் கோவிலில் நாளை காஞ்சி மடாதிபதி தரிசனம்



சென்னை; காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைய மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருவரும், தாம்பரம் அடுத்த ராஜ கீழ்பாக்கத்தில் உள்ள காஞ்சி மஹா சுவாமி வித்யா மந்திர் வளாகத்தில், சாரதா நவராத்திரி மகோத்வத்தை நடத்தி வருகின்றனர். நவராத்திரி விழாவையொட்டி வழக்கமான சந்திரமவுலீஸ்வரர் மூன்று கால பூஜையும், காலை மற்றும் இரவில் நவாவர்ண பூஜையும் நடத்தி வந்தனர். நவராத்திரிக்காக நிறுவப்பட்டிருக்கும் விசேஷ யாக சாலையில், ஸ்ரீவித்யா ஹோமம், சண்டி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்களும் நடைபெற்றது. சிறப்பாக நடைபெற்ற நவராத்திரி விழா நிறைவடைந்ததை முன்னிட்டு, நாளை 5ம் தேதி காலை 7 மணிக்கு பூஜ்யஸ்ரீ சங்கராச்சாரியார் சுவாமிகள், சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு வருகை தந்து தரிசனம் செய்ய உள்ளனர்.  முன்னதாக இன்று சென்னையில் மடிப்பாக்கம் புதிதாக விஷ்ணுபாத ,ஷ்ரதா பவனம் புதிய கட்டத்தை காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திறந்து வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்