நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி, தேவநாத சுவாமி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
நெல்லிக்குப்பம் பாமா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் மூலவர் சிலைகள் அத்தி மரத்தாலானது சிறப்பாகும். இதன் காரணமாக மூலவருக்கு அபிஷேகத்துக்கு பதிலாக தைலகாப்பு நடப்பது வழக்கம். புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையையொட்டி இன்று மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மூலவர் வேணுகோபால சுவாமி திருவந்திபுரம் தேவநாத சுவாமி அலங்காரத்தில் அருள்பாலித்தார். பாமா ருக்மணி சமேதராய் வேணுகோபால சுவாமி உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பூஜைகளை ரமேஷ் பட்டாச்சாரியார் செய்தார். இதே போன்று, நெல்லிக்குப்பம் பூலோகநாதர், அலர்மேலுமங்கை தாயார் சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது.