ஷரத் பூர்ணிமா; இரவு முழுதும் நிலவொளியில் வைக்கப்பட்ட கீர் வைத்து உஜ்ஜைனி மகாகாளேஸ்வருக்கு ஆரத்தி



உஜ்ஜைன்; மத்தியப் பிரதேசம், உஜ்ஜைனி மகாகாளேஸ்வரர் கோயிலில் ஷரத் பூர்ணிமாவை முன்னிட்டு கீர் வைத்து, பஸ்ம ஆரத்தி நடைபெற்றது. 


ஷரத் பூர்ணிமா நேற்று அக்டோபர் 6ம் தேதி இரவு கொண்டாடப்படும். இந்த பௌர்ணமி அன்று தயாரிக்கப்படும் கீர் அமிர்தத்திற்கு சமமாகக் கருதப்படுகிறது, ஏனெனில் இந்த நாளில் நிலவொளி அமிர்தத்தைப் பொழிவதாகக் கூறப்படுகிறது. கீரை தயாரித்து திறந்த நிலவொளியில் வைக்க வேண்டும், இதனால் அது அமிர்தத்தைப் பொழியும் என்று கூறப்படுகிறது. காலையில் கீரையை பிரசாதமாக சாப்பிடுவது வலி, துன்பம் மற்றும் எதிர்மறையை நீக்கி, வீட்டிற்கு அமைதியை தரும் என நம்பப்படுகிறது. அதன்படி நேற்று இரவு முழுதும் நிலவொளியில் வைக்கப்பட்ட கீர், இன்று உஜ்ஜைனி மகாகாளேஸ்வரருக்கு வைக்கப்பட்டு, பஸ்ம ஆரத்தி நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்