பிரசித்தி பெற்ற கல்பாத்தி ரதோத்ஸவம் நவ.,07ல் துவக்கம்; நவ.,17ல் ரத சங்கமம்



கேரளா, பாலக்காடு, கல்பாத்தியில் பிரசித்தி பெற்ற விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோயில் தேர்த் திருவிழா நவ., 07 தேதி துவங்குகிறது. 11 நாள் நடைபெறும் விழா 17 ம் தேதி நிறைவடைகிறது. விழாவில் முதல் நாள் நவ.,7 ம் தேதி வாஸ்து சாந்தி, வாஸ்து ஹோமம், வாஸ்துபலி மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனைத்து கோவில்களிலும் நடைபெறும். தொடர்ந்து நவ., 8ம் தேதி சனிக்கிழமை விழா நடக்கும் உப கோவில்களான, மந்தகரை மகாகணபதி, பழைய கல்பாத்தி லட்சுமி நாராயண பெருமாள், சாத்தபுரம் பிரசன்ன மகாகணபதி கோவில்களில் பக்தர்களின் முன்னிலையில் கொடியேற்றம் நடக்க உள்ளது. விழாவில் தினமும் கோவில்களில் ருத்ராபிஷேகம், களபாபிஷேகம், தீபாராதனை, வேதபாராயணம், மந்திர ஜபம் நடைபெறும்.  நவ.12ம் தேதி இரவு 11 மணிக்கு கோராதத்தில் தெய்வானை அஞ்சம் திருநாள் ஊர்வலம் மற்றும் புதிய ரத சங்கமம் இரவு 11.30. நள்ளிரவு 12.30 மணி வரை நடைபெற உள்ளது. நவம்பர் 14, 15 மற்றும் 16 ஆகிய மூன்று நாட்கள் கிராமவீதிகளில் ரதம் சிறப்பாக நடைபெற உள்ளது.  திருவிழாவின் சிறப்பு அம்சங்களில் ஒன்றான ரத சங்கமம், 17ம் தேதி மாலை நடக்கிறது.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்