மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் 24-ஆவது சந்நிதானத்தால் அடிக்கல் நாட்டப்பெற்று 25-வது சந்நிதானத்தின் காலத்தில் அப்போதைய முதல்வர் குமாரசாமிராஜா திறந்து வைத்த இலவச மகப்பேறு மருத்துவமனையை இடிக்க போவதாக முன்பு தகவல் வந்தது. முதல்வர் கவனத்துக்கு கொண்டுசென்று நிறுத்தப்பெற்றது. மீண்டும் நாளை பூமிபூசை போடுவதாக அறிந்தோம். நாம் வெளியூர் நிகழ்வில் இருக்கிறோம் இதை தடுத்து நிறுத்தவேண்டும் இல்லையாயின் உயிர்போகும் வரை அன்பர்களோடுஉண்ணாவிரதம் இருந்து முன்னோர்கள் கட்டியதை காப்போம். என தருமபுரம் ஆதீனம் 27 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.