அயோத்தி; அயோத்தி ஸ்ரீ ராம் ஜென்மபூமி மந்திரில் இன்று வால்மீகி ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது.
ராமாயணத்தை எழுதிய வால்மீகி பூமியின் புத்திரர் ஆவார். அவர் நாரதரின் அருளால், சம்சார பந்தமாகிய குடும்பத்தை துறந்து விட்டு ராம ராம எனச் சொல்லியபடியே பல்லாண்டுகள் தவத்தில் ஆழ்ந்தார். அவர் இருந்த இடத்தைச் சுற்றி புற்றே எழுந்து விட்டது. புற்று என்றால் பூமியின் காது என பொருள்படும். சமஸ்கிருதத்தில் புற்றை வன்மீகம் என்பர். இதனால் அவர் வான்மீகி எனப் பெயர் பெற்றார். புற்றில் இருந்து மறுபிறவி எடுத்தது போல் வந்தவர் என்பதால் அவர் பூமித்தாயின் புதல்வராகப் போற்றப்படுகிறார். வால்மீகி தான், முதன் முதலில் ராமாயணத்தை சமஸ்கிருதத்தில் எழுதினார். வால்மீகி ஜெயந்தியின் புனிதமான நிகழ்வான இன்று, ஸ்ரீ ராம் ஜென்மபூமி மந்திர் வளாகத்திற்குள் அமைந்துள்ள சப்த கோவில்களில் ஒன்றான ஸ்ரீ வால்மீகி மந்திரில் பகவான் வால்மீகிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.