ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் நாளை யாகசாலை பூஜைகள் துவக்கம்



இளையான்குடி; இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் நாளை யாகசாலை பூஜைகள் துவங்குகிறது.வருகிற நவ.3ம் தேதி மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.


சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்துக்குட்பட்ட ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் நடைபெற்று வந்த திருப்பணிகள் முடிவு பெற்றதை தொடர்ந்து கும்பாபிஷேக விழாவிற்காக நாளை காலை 8:00 மணி முதல் 10:30 மணிக்குள் அனுக்கை, விக்னேஸ்வர பூஜை வாஸ்து சாந்தியுடன், மாலை 5:00 மணிக்கு முதலாம் கால யாகசாலை பூஜை துவங்குகிறது. நாளை மறுநாள் காலை காலை 8:00 மணி முதல் தொடர்ந்து 3 நாட்கள் 6 கால யாக சாலை மற்றும் பல்வேறு பூஜைஙநடைபெற்று நவ.3ம் தேதி காலை 9:00 மணிக்கு கடம் புறப்பாடாகி காலை 9:30 முதல் 10:25 மணிக்குள் மூலஸ்தானம், ராஜகோபுரம், பரிவார தெய்வ கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து அபிஷேகம், அலங்காரம் , தீபாராதனை,அன்னதானம் நடைபெற உள்ளது. அன்று மாலை 5:00 மணிக்கு ஞானாம்பிகை சமேத ராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கல்யாணமும், இரவு 9:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான நிர்வாகிகள், இளையான்குடி ஆயிர வைசிய சபையினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்