அமிர்தசரஸ்; கோஷ்டாஷ்டமி என்பது பசுக்களைப் போற்றி வழிபடும் நாளாகும். கிருஷ்ணர் வாழ்ந்த துவாபர யுகத்தில் இருந்தே கொண்டாடிய விழா இது. பசுவின் பவித்ரமான தேகத்தில் 33 கோடி தேவர்களும் வாசம் செய்வதாக நம்பிக்கை. இத்தகைய சிறப்பு மிக்க இவ்விழாவானது அமிர்தசரஸில் கொண்டாடப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பசுக்களுக்கு பூஜை செய்து வழிபட்டனர்.