மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் பவுர்ணமி திருவிளக்கு பூஜை



செஞ்சி; மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது.


விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு நேற்று மாலை திருவிளக்கு பூஜை நடந்தது. அதை முன்னிட்டு நேற்று அதிகாலை அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அம்மனுக்கு வெள்ளி கவச அலங்காரம் செய்தனர். மாலை 6 மணிக்கு உற்சவர் அங்காளம்மன் திருவிளக்கு மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு ச நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் குத்து விளக்கேற்றி திருவிளக்கு பூஜை செய்தனர். இரவு 8.00 மணிக்கு மகா தீபாராதனையும், அர்ச்சனையும் நடந்தது. பெண்களுக்கு பிரசாதமாக மங்கள பொருட்கள் வழங்கினர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சக்திவேல், அறங்காவலர் குழு தலைவர் சேட்டு என்கிற ஏழுமலை, அறங்காவலர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்