மாரியம்மன் கோயில் திருவிழாவில் அக்னிசட்டி எடுத்து நேர்த்திக்கடன்



கம்பம்; க. புதுப்பட்டியில் மாரியம்மன் கோயில் திருவிழாவில் மாவிளக்கு, அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.


மாரியம்மன் கோயில் திருவிழா புதுப்பட்டி,அனுமந்தன்பட்டி கிராமங்களில் கொண்டாடப்படுகிறது. பால் வியாபாரி தடுக்கி விழுந்த இடத்தில் சுயம்புவாக அம்மன் இருந்ததால், இந்த திருவிழாவை இரு கிராமங்கள் கொண்டாடுகின்றன. பால் வியாபாரி அனுமந்தன்பட்டியை சேர்ந்தவர். கிடைத்த இடம் புதுப்பட்டி. எனவே, இரு ஊர்களிலும் கோயில் கட்டி ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் கொண்டாடுகின்றனர். முந்தைய வாரம் அனுமந்தன்பட்டியில் திருவிழா முடிந்தபின், நவ. முதல் தேதி புதுப்பட்டிக்கு அம்மன் கொண்டுவரப்பட்டது. அன்று முதல் நேற்று வரை ஒருவாரம் திருவிழா நடைபெற்றது. மஞ்சள் நீராட்டம் , மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல், அக்னிசட்டி எடுத்தும், வண்டி வேஷம், முளைப்பாரி ஊர்வலம் எடுத்து பக்தர்கள் நேர்த்திகடன்களை நிறைவேற்றினர். ஒவ்வொரு நாளும் விதவிதமான அலங்காரத்தில் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிவபெருமான், பெருமாள், விநாயகர், முருகப்பெருமான் மற்றும் அம்மன் வேடமணிந்த சிறுவர்கள் வந்தனர். கலைக் குழு பெண்களின் கும்மிப்பாட்டு, கோலாட்டம் கலை நிகழ்ச்சிகள் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. திருவிழா முடிந்து அம்மன் அனுமந்தன்பட்டிக்கு புறப்பட்டு சென்றது.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்