ஈரோட்டில் காவிரி ஆரத்தி விழா; விளக்குகளை ஆற்றில் விட்டு வழிபாடு



ஈரோடு; ஈரோடு, கருங்கல்பாளையம் அருகில் உள்ள காவிரி ஆற்றங்கரையில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, காவிரி ஆரத்தி விழா நேற்று நடைபெற்றது. அகில பாரதீய சந்நியாசிகள் சங்கத்தின் நிறுவன தலைவர் சுவாமி ராமானந்தா பூஜைகளை துவக்கி வைத்தார். பின் பல்வேறு மந்திரங்களுடன், காவிரி அன்னைக்கு துாப விளக்கில் தீபாராதனை காண்பிக்கப்பட்டு மலர்கள் துாவி வணங்கினர். அதனை தொடர்ந்து பக்தர்கள் அனைவரும் வரிசையாக தீபவிளக்கு ஏந்தியவாறு, காவிரியை வழிபட்டு விளக்குகளை ஆற்றில் விட்டனர். காவிரி ஆற்றை அசுத்தம் செய்யாமல் புனிதமாக பாதுகாக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்