பக்தியின் மூலம் எம்பெருமானை அறியும் ஞானம் பெறலாம்

23-டிசம்பர்-2025



புதுச்சேரி: பக்தி எனும் மத்தினால் பகவத் அனுபவம் எனும் தயிரைக் கடைந்தால் எம்பெருமானை அறியும் ஞானம் என்னும் வெண்ணெய் திரண்டு வரும் என ஓய்வு பெற்ற நீதிபதி ராம பத்ர தாதம் உபன்யாசம் செய்தார்.


முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நடைபெற்று வரும் மார்கழி மாத உபன்யாசத்தின் 7 ம் நாளான நேற்று, முன்னாள் நீதிபதி ராமபத்ர தாதம் நிகழ்த்திய உபன்யாசம்: எம்பெருமானின் பன்னிரண்டு திருநாமங்களில் முதல் இரண்டு திருநாமங்கள் “கேசவன்“, “நாராயணன்’’ என்ற திருநாமங்கள் என்பதால் “நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும்“ என்று இந்த முதல் திருநாமங்களைச் சொல்லி கோதைப் பிராட்டி இந்தப் பாசுரத்தில் அருளியுள்ளது இப்பாசுரத்தின் சிறப்பு. திருப்பாவையில் நாராயணன் என்ற திருநாமத்தை 3 பாசுர வரிகளிலும், கேசவன் என்ற திருநாமத்தை 2 பாசுர வரிகளிலும்ஆண்டாள் போற்றியுள்ளார். திருப்பாவையும் சேர்த்து, திவ்யப் பிரபந்தத்தில் மொத்தம் 11 பாசுரங்களில் நாரயண நாமமும், 24 பாசுரங்களில் கேசவன் என்ற திருநாமமும் சொல்லப்பட்டுள்ளது. திருப்பாவையின் 7ம் பாசுரத்திலும் செவிக்கும், மனதிற்கும் இனிமை தரும் மங்கள சப்தங்களான கீச்சு கீச்சு “என்று ஆனைச்சாத் தன் குருவிகள் கிரீச்சிட்டு எழுப்பும் ஒலிகள், ஆய்ச்சியர்கள் தயிர் கடையும் போது, ஆய்ச்சியரின் அச்சுத்தாலியும், ஆமைத்தாலியும் அசைவதால் கலகலவென்று எழும் ஓசை, தயிர் கடையும் போது எழும் மத்தின் சப்தம், கேசவா நாராயணா என்ற நாம சங்கீர்த்தன பேரரவம் என்று மனத்திற்கும் செவிக்கும் இனிமையான அந்த சப்தங்களைக் கோர்த்து மாலையாக்கி பாமாலையாகப் பாசுரத்தை அமைத்துள்ளாள் ஆண்டாள். இந்த பரமானுபவத்தை ஸ்வாமி தேசிகனும் கோபால விம்சதியில் அழாகாகச் சொல்லியுள்ளார். அதாவது பக்தி எனும் மத்தினால் பகவத் அனுபவம் எனும் தயிரைக் கடைந்தால் எம்பெருமானை அறியும் ஞானம் எனும் வெண்ணெய் திரண்டு வரும். அந்த ஞானமே நம் உஜ்ஜீவனம் என்று ஆண்டாள் குறிப்பாக உள்ளுரைப் பொருளாக இந்த பதங்களில் உணர்த்துகிறாள் என்றார். 


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்