அவிநாசி: திருப்பூர் மாவட்ட, அவிநாசி – கருவலுார் மண்டலம் சார்பில், ஹிந்து சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது.
கருவலுார் ரத்னமூர்த்தி மஹாலில் நடந்த இந்நிகழ்ச்சியில், ஹிந்து தர்மத்தில் பெண்களின் பெருமை குறித்து, சிறப்பு விருந்தினர்கள் சிறப்புரை ஆற்றினர். தொடர்ந்து, பின்னர் கோ மாதா பூஜை, குடும்ப நல வேள்வி நடைபெற்றது. கருவலுார் முன்னாள் ஊராட்சி தலைவர் அருணாசலம், ராதாகிருஷ்ணன், அத்திக்கடவு சம்பத், செல்வமணி, தங்கவேல் தலைமை வகித்தனர். முன்னதாக, வெண்ணிலா வரவேற்றார். ஆறுச்சாமி, லட்சுமணசாமி, அங்கப்பன், கதிர்வேல், சீனிவாச அய்யங்கார் முன்னிலை வகித்தனர். விழாவில், கருவலுார் வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர். சுவாமி விவேகானந்தர் ஹிந்து சங்கமம் விழா குழு சார்பில் ஹரிஹரசுதன் நன்றி கூறினார்.