மஞ்சூர் ஹட்டியில் ஹெத்தையம்மன் திருவிழா காணிக்கை செலுத்தி பிரார்த்தனை



ஊட்டி: மஞ்சூரில் நடந்த ஹெத்தையம்மன் திருவிழாவில், படுகரின மக்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனுக்கு காணிக்கை செலுத்தினர்.


மஞ்சூர் ஹட்டி மற்றும் மணிக்கல் கிராமங்களின் சார்பில் ஹெத்தையம்மன் திருவிழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு மஞ்சூர் மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள ஹெத்தையம்மன் கோவிலில் பல்வேறு அபிஷேகங்களுடன் சிறப்பு பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து ஹெத்தையம்மனுக்கு காணிக்கை, நேர்த்திகடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. மஞ்சூர், மணிக்கல் சுற்றுபுற பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுகரின மக்கள் பாரம்பரிய உடையணிந்து அணிந்து நீண்ட வரிசையில் நின்று அம்மனுக்கு காணிக்கை செலுத்தி தங்களது நேர்த்திகடனை நிறைவேற்றினர். தொடர்ந்து, படுகரின மக்களின் நடனம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்