பழநி; பழநி மகிஷாசுரமர்த்தினி கோவிலில் தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் நலன் வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. பழநி கோயிலுக்கு தைப்பூசத்தை முன்னிட்டு பாதயாத்திரையாக பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. பத்தர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் வேண்டி கும்ப கலசங்கள் வைத்து, பழநி, மேற்கு கிரி வீதியில் உள்ள மகிஷாசுரமர்த்தினி கோவிலில் கணபதி யாகம், சிறப்பு யாகம் நடைபெற்றது. யாகத்தில் வைக்கப்பட்ட கலசநீரில் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கன்பத் கிராண்ட் உரிமையாளர் ஹரிஹர முத்து அய்யர், கோயில் கண்காணிப்பாளர் ராஜா, கோயில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.