மதுரை; திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் கூடரைவல்லி உற்சவத்தின் உச்சநிகழ்ச்சியாக தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீதேவி பூமாதேவி ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு அபிஷேகங்கள், பூஜை முடிந்து சிறப்பு அலங்காரமாகி மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. நிலையூர் கைத்தறி நகர் ஸ்ரீ பாலாஜி வெங்கடேஸ்வர பெருமாள் கோயிலில் உற்சவர் மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை முடிந்து ஆண்டாள் தாயார் மாலை மாற்றும் வைபவம் நடந்தது.