பழநி கோயிலுக்கு பேட்டரி பஸ், ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டது



பழநி; பழநி கோயிலுக்கு பக்தர்களின் வசதிக்காக ஒரு பேட்டரி பஸ், ஆம்புலன்ஸ் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.


பழநி கிரிவீதியில் நீதிமன்ற உத்திரவின்படி தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. பக்தர்கள், கிரிவீதியில் வின்ச் ஸ்டேஷன், ரோப்கார் ஸ்டேஷன் சுற்றுலா பஸ்ஸடேண்ட், ஆகியவற்றிற்கு மூத்த குடிமக்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் பயணிக்க பக்தர்களுக்கு இலவசமாக கோயில் நிர்வாகம் சார்பில் பேட்டரி கார், பேட்டரி பஸ் 2024,மார்ச்.,முதல் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது 11 பேர் அமரக்கூடிய 18 பேட்டரி கார், 14 பேர் அமரக்கூடிய பேட்டரி மினி பஸ் 1, 23 பேர் அமரக்கூடிய 19 பேட்டரி பஸ்,என 38 மின் வாகனங்களை இயக்கி வருகிறது. இந்நிலையில் ( இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்) வங்கி சார்பில் திண்டுக்கல் மண்டலம் சார்பில் (முதுநிலை மண்டல மேலாளர் சந்திரகுமார் முதன்மை மேலாளர் நீரஜ் குமார்) 23 பேர் அமரக்கூடிய எலக்ட்ரிக் பஸ் ஒன்றை வழங்கினர்.


மேலும் படிப்பாதை, இடும்பன் கோயில், வின்ச், பாத விநாயகர் கோயில் ஆகிய இடங்களில் மருத்துவ முதலுதவி மையம் செயல்பட்டு வருகிறது. கோயிலுக்கு நவீன உபகரணங்களுடன் கூடிய ஆம்புலன்ஸ் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேரூராட்சி துணைத் தலைவர் முருகேசன், ரூ.7.39 லட்சம் மதிப்பீட்டில் சிறிய ரக ஆம்புலன்ஸ் ஒன்றை பக்தர் பயன்பாட்டிற்கு வழங்கி உள்ளார். வாகனங்களை பாத விநாயகர் கோயில் முன்பு சிறப்பு பூஜைகள் செய்து கோயில் சேர்மன் சுப்பிரமணியன், கோயில் இணைக்கமிஷனர் மாரிமுத்துவிடம் ஒப்படைத்தனர். கோயிலில் செயல்படும் ஆம்புலன்ஸ் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. தற்போது கிரி வீதியில் கோயில் சார்பில் 39 மின் வாகனங்கள் பக்தர்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்