சோமனூர் சவுடேஸ்வரி அம்மன் கோவில் ஆண்டு விழா



சோமனூர்: சோமனூர் சவுடேஸ்வரி அம்மன் கோவில் ஆண்டு விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


சோமனூர் சேடபாளையம் ரோட்டில் உள்ள ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் பழமையானது. புண்ணிய நதிகளில் இருந்து தீர்த்தங்கள் கொண்டு வரப்பட்டு, நேற்று முன்தினம் காலை கணபதி பூஜையுடன் ஆண்டு விழா துவங்கியது. ருத்ர ஹோமம், குபேர மகாலட்சுமி ஹோமம் முடிந்து, புனித நீர் கலச அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, அலங்கார பூஜை, மகா தீபாராதனை நடந்தது. சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து அன்னதானம் நடந்தது. கோவில் கமிட்டியினர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்