மாசாணியம்மன் கோவிலில் மரத்தேர் அமைக்க திட்டம் தக்கார் தகவல்



ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், ஒரு கோடி ரூபாய் செலவில் மரத்தேர் அமைக்கப்படும், என, தக்கார் தரணிபதி ராஜ்குமார் தெரிவித்தார்.


ஆனைமலை மாசாணியம்மன் கோவில் தக்காராக தரணிபதி ராஜ்குமார் பொறுப்பேற்று கொண்டார். இவர், கடந்த, 2006 – 11ம் ஆண்டு வரை அறங்காவலர் குழு தலைவராக இருந்தார். தக்காராக பொறுப்பேற்றுக்கொண்ட ராஜ்குமாருக்கு, உதவி ஆணையர் முத்துராமலிங்கம், தி.மு.க. நிர்வா கி சாந்தலிங்கம், செயலாளர்கள் செந்தில்குமார், யுவராஜா, பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி மற்றும் கோவில் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.


தக்கார் கூறியதாவது:


ஆனைமலை மாசாணியம்மன் கோவில் தக்காராக நியமனம் செய்த தமிழக முதல்வர் ஸ்டாலின், ஹிந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாவட்ட பொறுப்பு அமைச்சருக்கு மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன்.


கடந்த, 2006 – 11ம் ஆண்டு வரை அறங்காவலர் குழு தலைவராக பணியாற்றிய போது, ராஜகோபுரம், தங்க தேர் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள வாய்ப்பு கிடைத்தது. தற்போது விடுபட்ட பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.


கோவிலுக்கு மரத்தேர் செய்ய அமைச்சர் அனுமதி பெற்று பணிகள் மேற்கொள்ளப்படும். குண்டம் தேர் திருவிழாவின் போது, தேர் இயக்குவது குறித்து ஆலோசிக்கப்படும்.


உபயதாரர்கள் வாயிலாக, ஒரு கோடி ரூபாய் செலவில் மரத்தேர் செய்யப்படும். 12 மாதங்களில் பணிகளை முடித்து அடுத்த ஆண்டு தேரோட்டம் நடத்த முயற்சிகள் எடுக்கப்படும்.கோவில் முன்பாக உள்ள இடம், கோவிலுக்கே வழங்கப்படும்.


மேலும், மாசாணியம்மன் கோவிலின், உபகோவிலான பெருமாள்சுவாமி கோவிலிலும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பணிகள் படிப்படியாக மேற்கொள்ளப்படும்.


இவ்வாறு, அவர் தெரிவித்தார். 


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்