பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதி மக்கள், தைப்பூச பாத யாத்திரை செல்லும் நிகழ்ச்சி நடந்தது.
பொள்ளாச்சி அருள்மிகு குழந்தை வேலாயுதசுவாமி பழநி பாத யாத்திரை குழு மற்றும் ஜோதிநகர், பி.கே.எஸ்., காலனி, குறிஞ்சி நகர், காமராஜ் நகர் பொதுமக்கள் சார்பில், தைப்பூச திருவிழா நேற்று நடந்தது.
பி.கே.எஸ்., காலனி முத்து விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து மாலை, 4:30 மணிக்கு பாத யாத்திரை புறப்படும் நிகழ்ச்சி நடந்தது. நகராட்சி துணை தலைவர் கவுதமன், கவுன்சிலர் செந்தில்குமார் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். குழந்தைகள் முருகர் வேடமணிந்து பாதயாத்திரை சென்றனர்.
* வால்பாறை, வாட்டர்பால்ஸ் எஸ்டேட் பாலமுருகன் கோவிலில் தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை கணபதி ேஹாமம், அபிேஷக பூஜையும், சிறப்பு அலங்கார பூஜை நடந்தது.
முடீஸ் பஜார் சுப்ரமணிய சுவாமி கோவிலில் சுவாமிக்கு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடந்தன. பன்னிமேடு பாலமுருகன் கோவிலின், 105ம் ஆண்டு தைப்பூசத்திருவிழா நடைபெற்றது. சிறப்பு யாக பூஜை, சுவாமிக்கு அபிேஷக, அலங்கார பூஜையும் நடைபெற்றது. அன்னதானத்தை நகராட்சி கவுன்சிலர் ஜெயந்தி துவக்கி வைத்தார். விழாவில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.