காங்கயம்: சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவில் தைப்பூச திருவிழாவில், இரண்டாவது நாள் தேரோட்டம் பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தேரோட்டத்தில் தேர் இன்று நிலை சேரும்.
காங்கயம், சிவன் மலையில் உள்ள ஸ்ரீசுப்ரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச தேர்த்திருவிழா நடந்து வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் துவங்கி, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மாலை தேர்வடம் பிடிக்கப்பட்டு பக்தர்களால் இழுக்கப்பட்டு தெற்கு வீதியில் நிலை நிறுத்தப்பட்டது. இரண்டாவது நாளான நேற்று மாலை மீண்டும் தேரோட்டம் நடந்தது.
தேர் மலையை சுற்றி வந்து கோசமலை பகுதியில் நிறுத்தப்பட்டது. மூன்றாவது நாளான இன்று மாலை தேர் நிலையை அடையும்.
மாடு அலங்கரிப்பு தேர்த்திருவிழாவையொட்டி கிராம மக்கள் விரதம் இருந்து குழுவாக சென்றும், காவடி எடுத்தும் வந்தும் நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர். ஒரு சிலர் தங்களின் காளை மாடுகளை அலங்கரித்து காவடியுடன் கொண்டு செல்கின்றனர். அந்த காளைக்கு பக்தர்கள் பணம் தோரணமாக போட்டு அலங்காரம் செய்தும் அழைத்து வருகின்றனர்.