கூடலுார்; கூடலுார் கூடல் சுந்தரவேலவர் திருக்கோயிலில் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது.
சனீஸ்வர பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் கோயில் வளாகத்தில் உள்ள சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகளான மேஷம், சிம்மம், கன்னி, தனுசு, கும்பம், மீனம் ராசியை சேர்ந்தவர்கள் வெற்றிலை வாழைப்பழம் கொண்டு வந்து பூஜையில் கலந்து கொண்டனர். தனியார் திருமண மண்டபத்தில் மாதா அமிர்தானந்தமயி சேவா சமிதி சார்பில் சனிப்பெயர்ச்சி ஹோமம் நடந்தது. சத்சங்கம், மானச பூஜை, சனி அஷ்டோத்ர அர்ச்சனை, பஜனை நடந்தது. ஹோமதிரவியம் சமர்பிக்கப்பட்டது. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.