கொளஞ்சியப்பர் கோவிலில் ‘பிராது’ வழிபாடு; காங்., எம்.எல்.ஏ., மீது நிர்வாகிகள் அதிருப்தி



விருத்தாசலம்: விருத்தாசலம் தொகுதியில் மீண்டும் சீட் கிடைக்க வேண்டி எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள் பிராது கட்டியதால், காங்., மூத்த நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.


கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுாரில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொளஞ்சியப்பர் கோவில் உள்ளது. இங்கு பிராது கட்டி வேண்டினால், 3 நாட்கள் அல்லது, 3 வாரங்கள் அல்லது, 3 மாதங்களில் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம். அதன்படி, சிட்டிங் எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்களான மாவட்டத் தலைவர் லாவண்யா உள்ளிட்ட நிர்வாகிகள், ராதாகிருஷ்ணனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டி, நேற்று காலை 11:00 மணியளவில் பிராது கட்டி வழிபாடு செய்தனர். சமீபத்தில் கடலுார் மேற்கு மாவட்டத்தலைவராக இருந்த ராதாகிருஷ்ணன் மாற்றப்பட்டு, அவரது ஆதரவாளரான லாவண்யா என்பவர், அதே பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, கடந்த, 2022ல் கட்சிக்கு வந்த, லாவண்யாவை எப்படி மாவட்ட தலைவ ராக நியமித்தீர்கள்? எனக் கேட்டு நிர்வாகிகள் பலரும் இணைந்து, போராட்டம் செய்தனர்.


அப்போது நெய்வேலி தொகுதியை சேர்ந்த ராதா கிருஷ்ணன், விருத்தாசலத்தில் சீட் பெற்று, எம்.எல்.ஏ.,வாகி விட்டார். வரும் தேர்தலில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்தால், யாரும் வேலை செய்ய மாட்டோம். உள்ளூர் நபருக்கே வாய்ப்பு தர வேண்டும் எனக் கூறினர். இந்நிலையில், எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள் சிலர், ராதாகிருஷ்ணனுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என பிராது கட்டியதால், விருத்தாசலம் தொகுதியில் பல ஆண்டுகளாக காத்திருக்கும் காங்., மூத்த நிர்வாகிகள் பலரும் அதிருப்தி அடைந்துள்ளனர். இது குறித்து காங்., மூத்த நிர்வாகிகள் சிலர் கூ றுகையில், ‘அழகிரி மாநில தலைவராக இருந்ததால், அவரது ஆதரவாளரான நெய்வேலி தொகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணனுக்கு வாய்ப்பு கிடை த்தது. இவரால் விருத்தாசலம் தொகுதிக்கு எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை. கடந்த தேர்தலில் இருந்து தி.மு.க., நிர்வாகிகள் பலரும் வாய்ப்பு கேட்டு காத்திருக்கும் நிலையில், மீண்டும் ராதாகிருஷ்ணனுக்கு வாய்ப்பு வழங்கினால், அவர்களும் வேலை செய்ய மாட்டார்கள். இதனால் தி.மு.க., கூட்டணிக்கு, வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் ஒன்றை இழக்க நேரிடும். உள்ளூரில் உள்ள காங்., மூத்த நிர்வாகிகளில் யாருக்கேனும் வாய்ப்பு வழங்க வேண்டும். இது தொடர்பாக மாநில தலைவர் செல்வப்பெருந்தகை ஆலோசனை செய்து, தகுதியான உள்ளூரை சேர்ந்த நபருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்’ என்றனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்