காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70 வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மஹோத்சவம் வரும் 12ம் தேதி துவங்குகிறது. இதையொட்டி 12ம் தேதி முதல், 14ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு காஞ்சிபுரம் சங்கர மடத்தில் தினமும் காலையில், வேதபாராயணம், வித்வத் ஸதஸ், உபன்யாசம், நாமசங்கீர்த்தனம், சங்கீத கச்சேரி நடக்கிறது. காஞ்சி விஜயேந்திரரின், ஜெயந்தி மஹோத்சவ தினமான வரும் 14ம் தேதி காலை 7:00 மணி முதல், மஹா ஸ்வாமிகள் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனத்தில், அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மஹாதீப ஆராதனை நடக்கிறது.