காரைக்கால்; காரைக்காலில் கைலாசநாதர் கோவிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவப் பெருவிழா தேர்திருவிழா நடைபெற்றது.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுந்தராம்பிகை உடனமர் ஸ்ரீ கயிலாசநாத சுவாமி கோவிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவப் பெருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.அதனை தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலாவும் நடைபெற்று வருகிறது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று தேர்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் சுந்தராம்பாள் சமேத கைலாசநாதர் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஓம் நமச்சிவாய,நமச்சிவாய என்று பக்திபரவசத்துடன் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். பின்னர் தேர் கென்னடியார் வீதி, மாதா கோவில் வீதி உள்ளிட்ட முக்கிய பிரதான சாலைகள் வழியாக தேர்நடைக்கு வந்தடைந்தது. வரும் 3ம் தேதி தெப்பத்திருவிழாவும், 4ம் தேதி- காரைக்கால் அம்மையார் ஐக்கிய விழா நடைபெறுகிறது. திருத்தேர் விழாவையொட்டி பல்வேறு இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.