மயிலம் முருகன் கோவிலில் முத்துப் பல்லக்கு உற்சவம்



மயிலம்: மயிலம் முருகர் கோவிலில்  பங்குனி உத்திர பெரு விழாவில் முத்துப்பல்லக்கு உற்சவம் நடந்தது.

மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமி கோவில்  பங்குனி உத்திர பெரு விழாவை  முன்னிட்டு நேற்று காலை 6:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு விமானத்தில்  உற்சவர் கிரிவலம் நடந்தது.  பிற்பகல் 12:00 மணிக்கு மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 11:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட முத்து பல்லக்கில் உற்சவர் கிரிவலம் நடந்தது. இன்று பங்குனி உத்திர நிறைவு விழாவை முன்னிட்டு காலை 11:00 மணிக்கு சண்டிகேஸ்வரர் உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை   மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார். 

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்