காஞ்சிபுரம் வேணுகோபால சுவாமிக்கு திருக்கல்யாணம் கோலாகலம்



காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த, கம்மவார்பாளையம் வேணுகோபால சுவாமி கோவிலில் திருக்கல்யாண உத்சவம் நடந்தது.. இங்கு, ஆண்டுதோறும் ராம நவமியை முன்னிட்டு, பத்து நாள் உத்சவம் நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு உற்சவம், மார்ச் -27ம் தேதி ராம நவமி அன்று, முதல் நாள் உத்சவம் துவங்கியது. தினசரி வேணுகோபாலசுவாமி மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். பத்தாவது நாளான நேற்று வேணுகோபால சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. இந்த கல்யாண உத்சவத்தை முன்னிட்டு இரவு 9:00 மணிக்கு திருமண சீர்வரிசை புறப்பாடு மற்றும் திருக்கல்யாணம் உத்சவ வைபவத்தில், சிவாச்சாரியர்கள் மாங்கல்யத்தை அணிவித்து திருமணம் செய்து வைத்தனர். இதையடுத்து, சீதா ராமராக பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று, பட்டாபிஷேக விழா நடந்தது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்