திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா உச்ச நிகழ்ச்சியாக இன்று தீர்த்த உற்ஸவம் நடந்தது. மார்ச் 23ல் கொடியேற்றத்துடன் துவங்கியது பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் ஏப். 4, தேரோட்டம் ஏப்.5ல் நடந்தது. திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியான தீர்த்த உற்ஸவத்தை முன்னிட்டு இன்று கோயில் உற்ஸவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, சத்தியகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை, கற்பக விநாயகர், சண்டிகேஸ்வரர், அஸ்தரதேவர் எழுந்தருளினர். மார்ச் 23முதல் நடந்த யாகசாலை பூஜை நேற்று காலை பூர்த்தி செய்யப்பட்டது. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தீபாராதனை முடிந்து அஸ்தரதேவர் சரவணப் பொய்கை கொண்டு செல்லப்பட்டார். அங்கு திருவிழா நம்பியார் சிவாச்சாரியார், தண்ணீரில் அஸ்தர தேவரை கொண்டு சென்று தீர்த்த உற்ஸவம் நடந்தது. இரவு தங்க மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வனை ரத வீதிகளில் உலா நிகழ்ச்சி முடிந்து கொடி இறக்கப்படும்.