நெல்லிக்குப்பம் அய்யனாரப்பன் கோவில் கும்பாபிஷேகம்



நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அய்யனாரப்பன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.


நெல்லிக்குப்பம் குடிதாங்கிசாவடி ஹரிஹரபுத்திர சுவாமி அய்யனாரப்பன் கோவிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் விழா கடந்த 3ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 4 ம் தேதி முதல்கால யாகசாலை பூஜை, 5 ம் தேதி 2 மற்றும் 3ம் கால யாகசாலை பூஜை நடந்தது. இன்று காலை யாகசாலை பூஜைகள் முடிந்து கடம் புறப்பட்டது. கோவிலை வலம் வந்து கோவில் விமானங்கள் மற்றும் மூலவர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. மாலை பூரணி, புஷ்கலை சமேத ஹரிஹரபுத்திர அய்யனாரப்பன் திருக்கல்யாணம், இரவு சுவாமி வீதி உலா நடக்கிறது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்