அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவிற்கு தயாராகும் தேர்கள்



அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவிற்காக தேரை அலங்கரிக்கும் பணிகளுக்காக இரும்பு சாரம் கட்டும் பணிகள் தீவிரம்.


கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையானதாகவும் ஆசியாவில் மூன்றாவது பெரிய தேர் என்ற சிறப்புடையதாகவும் போற்றப்படும் ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா வரும் ஏப்ரல் 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.  அதனை முன்னிட்டு கடந்த வாரம் தேர் நிலையில் தேர் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டிருந்த இரும்பு கூண்டுகள் அகற்றப்பட்டது. பின்னர், ஏர் கம்ப்ரசர் கொண்டு தேரில் உள்ள மண் தூசுகள், புழுதி படலம் ஆகியவை அகற்றப்பட்டு சுத்தப்படுத்தினர். கடந்த 6ம் தேதி சித்திரை தேர் திருவிழாவிற்கான ஆயக்கால் முகூர்த்த பூஜை தேரில் நடந்தது. தற்போது, தேரை அலங்கரிக்க இரும்பு சாரம் கட்டு பணிகள் நடைப்பெற்று வருகிறது. சித்திரை தேர் திருவிழாவிற்காக தேர் பிரிக்கும் பணிகளிலும், தேரை அலங்கரிப்பதற்காக இரும்பு பைப்புகள் மூலம் சாரங்கள் அமைக்கும் பணிகளை செய்து வரும் அவிநாசியை சேர்ந்த செல்வம் கூறும் போது, 1992ம் வருடம் புது தேர் செய்யப்பட்டு வந்ததிலிருந்து, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் தேருக்கு சாரம் அமைக்கும் பணிகள் செய்து வருகின்றோம். கடந்த 36 வருடங்களாக இந்த தெய்வீக பணியை செய்து வருகிறோம். 20,16,18 ,12 ஆகிய அடிகளில் உள்ள அளவுகளில் 72 பைப்புகள் மூலம் சாரம் அமைக்கப்படுகிறது. தேரை சுற்றிலும் பாதுகாப்பிற்காக போடப்பட்டுள்ள கண்ணாடி பதிக்கப்பட்ட இரும்பு ஷெட்டை பிரித்து,இரும்பு பைப்புகள் மூலம் சாரம் அமைத்து தேர் கலசம் வரை பூட்ட 22 நாட்கள் தேவைப்படுகின்றது.  இந்த வேலையை எட்டு பேர் இணைந்து செய்கின்றோம். பின்னர் தேர் விழா முடிந்த பின்பு, தேரை பிரிப்பதற்கு பத்து நாட்கள் ஆகும். தேர் அடி நிலையில் இருந்து மேல் பகுதி கலசம் வரை 108 அடி உயரம் கொண்டதாகும்.  அன்னூர்,குமாரபாளையம், சூலூர், கோபி தான்தோன்றி அம்மன் கோவில், பச்சைமலை,பவளமலை, பூண்டி, பெருமாநல்லூர், மைசூர் பத்ரி முருகன் ஆகிய கோவில்களில் தேர் சாரம் அமைக்கும் பணிகளை இரண்டு தலைமுறைகளாக செய்து வருகின்றோம் என்றார்.  


அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் சபரீஷ் குமார் கூறும் போது இன்னும் ஓரிரு நாளில் பெரிய தேர் மற்றும் அம்மன் தேர் ஆகிய இரண்டையும் தண்ணீர் கொண்டு பிய்ச்சி அடித்து சுத்தப்படுத்தி, வார்னிஷ் அடிக்கப்பட உள்ளது. பின்னர் தேர் சக்கரத்திற்கு கிரீஸ் வைத்தல், பிரேக் பொருத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெறும் என தெரிவித்தார். 


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்