அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோயிலில் அக்னி சட்டி எடுத்த பக்தர்கள்



அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கலை முன்னிட்டு பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.


இக்கோயிலில் மார்ச் 31 ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறும் விழா நடைபெறும். நேற்று பெண்கள் கோவிலும் முன்பு பொங்கல் வைத்து வழிபட்டனர். இன்று பக்தர்கள் வேப்பிலையுடன் அக்னிசட்டி ஏந்தி கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர். 51, 101 அக்னி சட்டி ஏந்தி பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். பறவை காவடி, அலகு குத்தியும் பக்தர்கள் வந்தனர். ஏற்பாடுகளை நாடார்கள் உறவின் முறை தலைவர் சுதாகர் தலைமையில், எஸ்.பி.கே., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயலர் காசி முருகன் முன்னிலையில், அம்பலம் பிரேம்குமார், உறவின்முறை செயலர் சரவணன், பொருளாளர் பாலசுப்பிரமணியம், துணைத் தலைவர் சுரேஷ்குமார், கல்லூரி செயலாளர் ஆசைதம்பி, பெண்கள் பள்ளி செயலாளர் ராம்குமார், ஆண்கள் பள்ளி தலைவர் ஜெய்கணேஷ், துவக்கப்பள்ளி செயலர் சௌந்தரபாண்டியன், இன்டர்நேஷனல் பள்ளி தலைவர் ராஜேஸ்குமார், கே.எஸ். பவுர்னா மருத்துவமனை செயலாளர் பிரசாத் மற்றும் நிர்வாகிகள் செய்தனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்