மானாமதுரையில் ஏப். 21ல் சித்திரை விழா துவக்கம்: வைகை சுத்தப்படுத்தப்படுமா?



மானாமதுரை; மானாமதுரையில் வரும் 21ம் தேதி சித்திரை திருவிழா துவங்க உள்ள நிலையில் வைகை ஆறு சுத்தம் செய்யப்படாமல் உள்ளது.


மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் வருடம் தோறும் 10 நாட்கள் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா வருகிற 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழாவின் போது கோயிலுக்கு எதிரே உள்ள வைகை ஆற்றில் ராட்டினங்கள், கடைகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்படுவது வழக்கம். திருவிழா துவங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தற்போது வரை வைகை ஆற்றில் சுத்தம் செய்யும் பணி துவங்கப்படாமல் உள்ளது.


பக்தர்கள் கூறியதாவது: மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழா போன்றே மானாமதுரையிலும் தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடைபெறும். திருக்கல்யாணம், தேரோட்டம்,வைகை ஆற்றில் அழகர் இறங்குதல், நிலாச்சோறு போன்ற நிகழ்ச்சிகளின் போது ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் ஒன்றாக சேர்ந்து விழாவை கொண்டாடும் நிலையில் வைகை ஆற்றில் எங்கு பார்த்தாலும் நாணல் செடிகளும், கருவேல மரங்களும் வளர்ந்து ஆங்காங்கே கழிவுநீர் ஓடி மோசமான நிலையில் உள்ளது. சுத்தம் செய்யும் பணியை நகராட்சி நிர்வாகத்தினர் இன்னும் துவங்காமல் உள்ளனர். மாவட்ட நிர்வாகம் வைகை ஆற்றை சுத்தம் செய்யும் பணியை துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்