மாடூர் பஞ்சமுக வாராஹி அம்மன் கோவிலில் வராஹ ஜெயந்தி



கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி, மாடூர் பஞ்சமுக மஞ்சள் வாராஹி அம்மன் கோவிலில் வராஹ ஜெயந்தி சிறப்பு பூஜைகள் நடந்தது.

பங்குனி மாத தேய்பிறையில் வரும் கேட்டை நட்சத்திரம் அன்று வராக ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அதன்படி கள்ளக்குறிச்சி, மாடூர் டோல்கேட் அருகில் பஞ்சமுக மஞ்சள் வாராஹி அம்மன் கோவிலில் இன்று காலை மூலவருக்கு மஞ்சள், இளநீர், பால், எலுமிச்சை, தயிர், குங்குமம் என 10 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து மகா தீபாராதணை காண்பிக்கப்பட்டது. சிறப்பு ஹோமங்கள், கலசாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள ஜலவாராஹி அம்மனுக்கு அம்மிக்கல்லில் ஏராளமான பக்தர்கள் பச்சை விராலி மஞ்சள் அரைத்து அம்மனுக்கு சார்த்தி நேர்த்தி கடன் செலுத்தினர்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்