நத்தம்: அடைக்கனுார் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா மார்ச் 22ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. வாணவேடிக்கைகளுடன் அம்மன் ஊர்வலம், சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. பக்தர்கள் பொங்கல் , மாவிளக்கு, பால்குடம், அக்னிச்சட்டி , பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் அம்மன் பூஞ்சோலை சென்றது. ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.