குன்னூர்: குன்னூர் தந்தி மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் தந்தி மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 3 ல் துவங்கி நடந்து வருகிறது. இதில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. முன்னதாக விபி தெருவில் உள்ள வேணுகோபால் சுவாமி கோவிலில் இருந்து சீர்வரிசை பொருட்கள் ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமானோர் சீர்வரிசை தட்டுகளுடன் மங்களப் பொருட்களை கோவிலுக்கு கொண்டு சென்றனர். அங்கு திருக்கல்யாண கல்யாண உற்சவம், சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மகாதீபாராதனை நடந்தது. மாலையில் வேப்ப மர வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா நடந்தது. ஏற்பாடுகளை சிவப்பு ரோஜா நற்பணி மன்றத்தினர், சகோதர சங்கத்தினர் வன்னியம்பதி சமூகத்தினர் மற்றும் பக்தர்கள் இணைந்து நடத்தினர்.