சிவகாசி: சிவகாசி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
சிவகாசி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா மார்ச் 29 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் அம்மன் சிம்ம, வெள்ளி ரிஷப, கைலாச பருவத , வேதாள, யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி திருவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் புரிவார். 3 நாட்களுக்கு பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். இரு நாட்களுக்கு முன்பு நடந்த கயிர் குத்து திருவிழாவில் பக்தர்கள் அக்கினி சட்டி எடுத்தும் கரும்புள்ளி செம்புள்ளி குத்தியும் வேப்பிலையில் உருண்டு கொடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்நிலையில் நேற்று தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.