சந்தான வேணுகோபால சுவாமி கருட வாகனத்தில் வீதியுலா



ஆர்.கே.பேட்டை: சித்திரை பிரம்மோத்சவத்தை ஒட்டி இன்று கருட வாகனத்தில் சந்தான வேணுகோபால சுவாமி வீதியுலா வந்தார்.


ஆர்.கே.பேட்டை அடுத்த எஸ்.வி.ஜி.புரத்தில் ருக்மணி, சத்யபாமா சமேத சந்தான வேணுகோபால சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், சித்திரை பிரம்மோத்சவம் கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று மாலை 6:00 மணிக்கு, அம்ச வாகனத்தில் சுவாமி வீதியுலா எழுந்தருளினார். அதை தொடர்ந்து, சிம்மம், அனுமந்த வாகனம், சேஷ வாகனம் என, தினமும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்தார். நேற்று இரவு கருட வாகனத்தில் சந்தான வேணுகோபால சுவாமி வீதியுலா வந்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். பிரம்மோத்சவத்தின் முக்கிய உத்சவமான தேர் திருவிழா நாளை நடக்கிறது. நாளை மறுநாள் சக்கர ஸ்தானத்துடன் பிரம்மோத்சவம் நிறைவுபெறுகிறது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்