கோத்தகிரி மாரியம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் சுவாமி தரிசனம்



கோத்தகிரி: கோத்தகிரி மாரியம்மன் கோவில் திருவிழாவில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


கோத்தகிரி கடைவீதியில் எழுந்தருளியுள்ள மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நாள்தோறும் நடந்து வருகிறது. விழாவின் ஒரு நிகழ்வாக நேற்று காலை, 10:00 மணிக்கு, கடைவீதி அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோவிலில் இருந்து, பால்குடம் ஊர்வலம், அம்மன் சன்னதியை அடைந்தது. தொடர்ந்து, 11:00 மணிக்கு, அபிஷேக மலர் அலங்கார வழிபாடு நடந்தது. பகல் 1:00 மணிக்கு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு, அம்மன் தாமரை வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்