மகாசக்தி மாரியம்மன் கோவிலில் அக்னி கம்பம் நடும் விழா



மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் மகாசக்தி மாரியம்மன் கோவிலில், அக்னி கம்பம் நடும் விழா நடந்தது.


மேட்டுப்பாளையம் பங்களா மேட்டில், மகா சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 16ம் ஆண்டு திருவிழா, கடந்த 28ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. நேற்று முன்தினம் இரவு அக்னி கம்பம் நடப்பட்டது. ராஜபுரம் முனியப்பன் கோவில் முன்பு அலங்காரம் செய்து வைத்திருந்த அக்னி கம்பத்திற்கு சிறப்பு பூஜை செய்தனர். அங்கு இருந்து கம்பத்தை கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் நட்டனர். பின்பு அம்மனுக்கு பூஜை செய்தனர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். 8ம் தேதி திருவிளக்கு பூஜையும், 10ம் தேதி ராஜபுரத்தில் இருந்து கரகம், பூச்சட்டிகள் எடுத்து வருதலும், அன்று இரவு ராஜா மகா சக்தி வள்ளி கும்மி குழுவினரின், ஆசிரியர் முத்துசாமி தலைமையில் வள்ளி கும்மி அரங்கேற்ற நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. 12ம் தேதி இரவு அம்மன் அழைப்பும், 13ம் தேதி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சக்தி விநாயகர் கோவிலில் இருந்து, பால்குடம் எடுத்து வருதலும், மதியம் அம்மனுக்கு அலங்கார பூஜையும், மாலையில் மாவிளக்கு எடுத்து வருதலும் நடைபெற உள்ளது. 14ம் தேதி மஞ்சள் நீராட்டும், 15ம் தேதி மறுபூஜையும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்