மேட்டுப்பாளையம் மகாசக்தி மாரியம்மன் கோவிலில் வள்ளி கும்மி ஆட்டம்



மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் மகாசக்தி மாரியம்மன் கோவிலில், திருவிழா நடைபெறுவதை அடுத்து, வள்ளி கும்மி அரங்கேற்றம் நடந்தது.


மேட்டுப்பாளையம் பங்களா மேட்டில் உள்ள, மகா சக்தி மாரியம்மன் கோவில், 16ம் ஆண்டு திருவிழா, பூச்சாட்டுதலுடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு ராஜபுரத்தில் இருந்து கரகம், பூச்சட்டிகளை பக்தர்கள் கோவிலுக்கு எடுத்து வந்தனர். இரவு ராஜா மகா சக்தி வள்ளி கும்மி குழுவினரின், ஆசிரியர் முத்துசாமி தலைமையில் வள்ளி கும்மி அரங்கேற்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பெண்கள், சிறுவர், சிறுமியர் பங்கேற்று கும்மி அடித்தனர். இரவு அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து, அனைவருக்கும் பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. நாளை (13ம் தேதி) பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சக்தி விநாயகர் கோவிலில் இருந்து, பால்குடம் எடுத்து வருதலும், மதியம் அம்மனுக்கு அலங்கார பூஜையும், மாலையில் மாவிளக்கு எடுத்து வருதலும் நடைபெற உள்ளது. 14ம் தேதி மஞ்சள் நீராட்டும், 15ம் தேதி மறுபூஜையும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்