தில்லையாடி மகாமாரியம்மன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்



நாகப்பட்டினம்: தில்லையாடியில் உள்ள மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர்.


நாகை, தில்லையாடி மகா மாரியம்மன் கோவிலில் தீமிதி உற்சவசக கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் ஞாயிற்றுக்கிழமை தீமிதி உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து,  தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக மாரியம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தேரில் மாரியம்மன் எழுந்தருளினார். சிறப்பு வழிபாடுகளுக்கு பின் பக்தா்கள் வடம் பிடிக்க தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. நான்கு வீதிகளில் வலம் வந்து நிலையை அடைந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிா்வாகிகள், கிராம மக்கள் செய்திருந்தனா்..


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்