கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் மண்டாலபிஷேக பூர்த்தி பூஜை



கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கடலுார், திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த மார்ச் 25ம் தேதி நடந்தது. மறுநாள் 26ம் தேதி மண்டலாபிஷேக பூஜை துவங்கியது. மண்டலாபிஷேக பூஜையின் 48வது நிறைவு நாளை முன்னிட்டு இன்று காலை அனுஞ்ஞை, சங்கல்பம் நடந்தது. மூலவர் மற்றும் உற்சவர் பஞ்சமூர்த்திகளுக்கு கலச அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, திரவிய ஆஹூதி ேஹாமம், மூலவர் மற்றும் உற்சவர் பஞ்சமூர்த்திகளுக்கு கலச அபிஷேகம், சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பூஜை ஏற்பாடுகளை நாகராஜ் குருக்கள் மற்றும் ஆலய வழிபடுவோர் சங்கத்தினர் செய்திருந்தனர். 


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்