கள்ளக்குறிச்சி சங்கரலிங்க சுவாமி சித்தர் பீடத்தில் சமயக்குரவர்கள் சிலை பிரதிஷ்டை



கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சங்கரலிங்க சுவாமி சித்தர் பீடத்தில் சமயக்குரவர்கள் நால்வர் உற்சவர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.


கள்ளக்குறிச்சி பெருவங்கூர் சாலையில் உள்ள கோமதியம்மன் உடனுறை சங்கரலிங்க சுவாமி சித்தர் பீடத்தில் விநாயகர், முருகன், துர்க்கை அம்மன், கால பைரவர் மற்றும் நவக்கிரக சுவாமிகள் அருள்பாலிக்கின்றனர். இங்கு பிரதோஷ வழிபாடு, துர்க்கை வழிபாடு, கால பைரவர் விழா, குருபூஜை நடந்து வருகிறது. இக்கோவிலில் சமயக்குரவர்கள் நால்வரான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரின் ஒன்றரை அடி உயர ஐம்பொன் உற்சவர் சிலைகள் பிரதிஷ்டை விழா நடந்தது. புண்ணியாகவஜனம், அக்னி பிரதிஷ்டை ஹோமம், சிலை கண் திறத்தல், விஸ்வரூபம், மகாசந்தி ஹோமம், மகாபூர்ணாஹூதி, யாகசாலை பூஜை நடத்தி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. வைபவத்தில் நல்லசேவிபுரம் சுப்ரமணிய அடிகளார் கலந்துகொண்டு வாழ்த்தினார். ஏற்பாடுகளை சங்கரலிங்கர் சித்தர் பீடம், சித்தர் அழகியார் உழவார திருக்கூட்ட தலைவர் சீனிவாச அடிகளார் மற்றும் சிவனடியார் வேலாயுதம், சைவத்திருமுறை பயிற்சி மைய அமைப்பாளர் சுப்பிரமணியன் உள்ளிட்டவர்கள் செய்திருந்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். 


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்