பாகூர்: சனி பகவான் ஜெயந்தியையொட்டி, பாகூர் மூலநாதர் சுவாமி கோவில் உள்ள பொங்கு சனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
பாகூரில் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், நவகிரகங்களில் மிக முக்கியமானவரான சனி பகவான் ஜெயந்தியையொட்டி, சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இதனையொட்டி, காலை 7:00 மணிக்கு பொங்கு சனீஸ்வரர் பகவானுக்கு பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்டவற்றால், அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. விழாவில், திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி சிவக்குமார், சிவாச்சார்யார்கள் சங்கர நாராயணன், பாபு ஆகியோர் செய்திருந்தனர்.