திருப்பரங்குன்றம் பத்ரகாளியம்மன் கோயிலில் விளக்கு பூஜை



திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் வட்டார இந்து நாடார்கள் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்ரகாளியம்மன் கோயிலில் 34ம் ஆண்டு உற்ஸவ விழா மே 12ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினம் அம்மனுக்கு பக்தர்கள் பொங்கல் வைத்தனர். நேற்று முன்தினம் விளக்கு பூஜை நடந்தது. இன்று பக்தர்கள் முளைப்பாரி, தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நாளை மஞ்சள் நீராட்டு, அம்மனுக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. மே 26இரவு மறுபூஜை நடக்கிறது. கோயில் நிர்வாகிகள் விழா ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். 

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்