விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோயிலில் வைகாசி பொங்கல் கொடியேற்றம்



விருதுநகர்: விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோயிலில் வைகாசி பொங்கல் கொடியேற்றத்துடன் துவங்கியது.

விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் முடிந்த நிலையில், இன்று வெயிலுகந்தம்மன் கோயிலின் வைகாசி பொங்கலை முன்னிட்டு கொடியேற்ற விழா நடந்தது. நேற்று இரவு 8:01 மணிக்கு கொடியேற்றினர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மகமை மண்டபம் சார்பில் அம்மன் எழுந்தருளி நகர்வலம் வந்து அம்மன் கோவில் திடலில் காட்சி தருவார். மே 26ல் பொங்கல். மே 27ல் கயறுகுத்து, அக்னிசட்டி. மே 28ல் தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை விருதுநகர் ஹிந்து நாடார் தேவஸ்தானத்தினர் செய்து வருகின்றனர்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்