ரணகாளியம்மன் கோயில் உற்ஸவ விழா அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திக் கடன்



பாலமேடு; ராமகவுண்டன்பட்டியின் ரணகாளியம்னன் கோயில் உற்ஸவ விழா மே 12ல் சாமி சாட்டுதல், பக்தர்கள் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. முன்னதாக அழகர் கோவில் சென்று தீர்த்தமாடி வந்தனர். மே 15 கொடிமரம் நடுதல், 19ல் நையாண்டி மேளம், மாலை6:00 மணிக்கு திருவிளக்கு பூஜை, மஞ்சமலை சுவாமி அனக்கரை சுவாமிக்கு கனி மற்றும் நிகழ்ச்சியை தொடர்ந்து கருப்புசாமி அழைப்பு, அம்மனுக்கு சக்தி கரகம் எடுத்து வருதல், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இன்று, காலை 4:00 மணிக்கு மாவிளக்கு எடுத்தல், 7:00 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம், 10:00 மணிக்கு பக்தர்கள் பால்குடம், அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். அம்மனுக்கு பொங்கல் வைத்து, கிடாய் வெட்டி வழிபாடு செய்தனர். மாலை அம்மன் பூஞ்சோலை சென்றடைந்தார். விழா நாட்களில் தினமும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் திருப்பணிக்குழு, இளைஞர் சங்கம், கிராம மக்கள் செய்தனர்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்