சூலூர்:பாப்பம்பட்டி ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.
சூலூர் அடுத்த பாப்பம்பட்டியில், பல்லடம் - செட்டிபாளையம் ரோட்டில் உள்ள மாகாளியம்மன் கோவில் பழமையானது. இங்கு, புதிதாக கருவறை, அர்த்த மண்டபம், ஸ்ரீ மாகாளியம்மன், விநாயகர், முருகர், ஆஞ்சநேயர், பைரவர், நவ கோள்கள் உள்ளிட்ட தெய்வங்களுக்கு புது சன்னதிகள் கட்டும் திருப்பணிகள் நடந்தன. திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா, கடந்த, 17 ம்தேதி இரவு விநாயகர் வழிபாட்டுடன் துவங்கியது. மறுநாள் காலை, கணபதி ஹோமம், காப்பு கட்டுதல், முளைப்பாலிகை இடுதல் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன .புனித நீர் கலசங்கள் நிறுவப்பட்டு, நான்கு கால ஹோமங்கள் பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. இன்று காலை, 7:30 மணிக்கு, நான்காம் கால ஹோமம் முடிந்து, புனித நீர் கலசங்கள், மேளதாளத்துடன் கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டு, 9:30 மணிக்கு, விமானத்துக்கும், 9:45 மணிக்கு ஸ்ரீ மாகாளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது..சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து, அன்னதானம் நடந்தது. திருப்பணி குழுவினர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.