புனித அந்தோணியார் சர்ச் தேர் ஊர்வலம்



கமுதி: கமுதி புனித அந்தோணியார் சர்ச் தேர் முக்கிய வீதிகளில் ஊர் வலமாக வந்தது.

கமுதி மெயின் பஜாரில் உள்ள புனித அந்தோணியார் சர்ச் 300 ஆண்டுகள் பழமை யானது. இங்கு ஆண்டு தோறும் ஜூன் மாதம் தேர் திருவிழா நடை பெறும் வழக்கம். நடப்பாண்டில் தேர் திருவிழா கடந்த வாரம் கொடி யேற்றத்துடன் துவங்கியது. தினமும் திருப்பலி நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.

கமுதி பங்குத்தந்தை அம்புரோஸ் லுாயிஸ் தலைமை வகித்தார். அந்தோணியார், ஜெபஸ்தியார், மிக்கேல் சம்மனசு, சவேரியார் தேர் மின்னொளி அலங்காரத்தில் சர்ச்சில் இருந்து நாடார் பஜார், முஸ்லிம் பஜார், செட்டியார் பஜார் உட்பட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் வந்தனர். அங்குள்ள பொதுமக்கள் அனைத்து மதத்தினரும் மெழுகுவர்த்தி படைத்து அந்தோணியாரை வணங்கினர்.

விழாவில் கமுதி அதனை சுற்றியுள்ள ஏராளமான பகுதிகளில் இருந்து பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளையும் பரத உறவின் முறையினர் செய்தனர்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்