கோவை; உலக நன்மைக்காக தென்கைலாய ஒருங்கிணைப்பு குழு சார்பில் 108 கோமாதா பூஜை 108 தம்பதியர் பூஜை இன்று ஞாயிற்றுக்கிழமை கோவை ஒலம்பஸ் நஞ்சுண்டாபுரம் ரோடு ராமநாதபுரம் பகுதியில் நடந்தது இதில் சிறிய யாக குண்டங்களை வைத்து தம்பதி பூஜை நடைபெற்றது பெரிய யாக குண்டத்தில் யாகம் வளர்த்து 108 கோமாதா பூஜை நடைபெற்றது இதில்பசு மாடுகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. வேத பண்டிதர்கள் மந்திரங்கள் முழங்க யாகம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கோவை மற்றும் திருப்பூர் பல்லடம் அவனாசி பொள்ளாச்சி உடுமலை ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வானது காலை 9 மணி அளவில் தொடங்கி மதியம் 12 மணியளவில் நிறைவு பெற்றது.